நான் பயிற்சி ஆசிரியராக சென்றிருந்த பள்ளியில் 13/10/2017 அன்று அறிவியல் கண்காட்சி நடைப்பெற்றது.
அதில் மாணவர்கள் இயற்கையான குளிர்சாதனப் பெட்டி,சோலார் வீடு போன்றவற்றை வைத்திருந்தனர்.
நான் பயிற்சி ஆசிரியராக சென்றிருந்த பள்ளியில் 13/10/2017 அன்று அறிவியல் கண்காட்சி நடைப்பெற்றது.
அதில் மாணவர்கள் இயற்கையான குளிர்சாதனப் பெட்டி,சோலார் வீடு போன்றவற்றை வைத்திருந்தனர்.
24/11/2017 அன்று நான் பயிற்சிக்காக சென்றிருந்த பள்ளியில் ஆண்டு விழா நடைப்பெற்றது.
அன்று நான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன்.
நான் ஒரு ஆசிரியர் ஆகும் போது எவ்வாறு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்.
18/1/2018 அன்று எங்களுடைய கல்லூரியில் விவேகானந்த கேந்திரத்தில் இருந்து மாதாஜி புவனேஸ்வரி அவர்கள் வந்து எழுச்சிமிகு உரையாற்றினார்கள்.
அது எனக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது.
15/11/2017 அன்று நான் பயிற்சிக்கு சென்றிருந்த பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடைபெற்றது.
அதில் மாணவர்களின் கல்வி நிலை பற்றி ஆலோசிக்க பட்டது.
நான் ஒரு ஆசிரியர் ஆகும் போது எவ்வாறு மாணவர்களின் பெற்றோர்களிடம் அணுகவேண்டும் என்பதை அறிந்து கொண்டேன்.
14/11/2017 அன்று நான் பயிற்சிக்கு சென்றிருந்த பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடினோம்.
அன்று மாணவர்கள் குழந்தை தொழிலாளர்களைப்பற்றி பேசினார்கள்.
அவர்களுடைய உரையைக் கேட்டு குழந்தை தொழிலார்களை ஒழிக்க என்னால் முடிந்த அளவு செயல்படுவேன் என உறுதி எடுத்துக் கொண்டேன்.
நான் பயிற்சிக்கு சென்றிருந்த பள்ளியில் 3/11/2017 அன்று டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.
அதில் மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் கொடுக்கப்பட்டது.
டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் முறைகளைப்பற்றி அறிந்துக்கொண்டேன்.
10/11/2017 அன்று நான் பயிற்சிக்கு சென்றிருந்த பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.
அதில் பேட்டி தொகுப்பாளராக நானும் பணியாற்றினேன்.
அதன் மூலம் விளையாட்டு பேட்டிகளை பள்ளியில் எவ்வாறு நடத்த வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன்.
நான் பயிற்சிக்கு சென்றிருந்த பள்ளியில் 21/8/2017 அன்று மரம் நடு விழாவைக் கொண்டாடினோம்.
அனைவரையும் ஒவ்வொரு மரக்கன்றுகள் கொண்டு வர சொல்லி அவர்களையே மரத்தை நட வைத்தனர்.
இந்நிகழ்ச்சியானது அனைவருடைய மனதிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
16/10/2017 அன்று நான் பயிற்சிக்கு சென்றிருந்த பள்ளியில் உலக கை கழுவுதல் தினம் கொண்டாடினோம்.
நாம் கைகழுவுதல் ஏற்படும் நன்மைகளையும் மற்றும் கைகளை கழுவாமல் இருப்பதால் ஏற்படும் தீமைகளைப் பற்றியும் அறிந்து கொண்டேன்.
15/8/2017 அன்று நான் பயிற்சிக்கு சென்றிருந்த பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது.
அன்று மாணவர்கள் சுதந்திர பேராட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களை பற்றி உரையாற்றினார்கள்.
அவர்கள் கூறும் போது தலைவர்களின் தியாகங்களை பற்றி அறிந்து கொண்டோன்.
24/12/2017 அன்று எங்களுடைய கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடினோம்.
பரிசுகளும் பகிர்ந்துக்கொண்டோம்.
இதன்மூலமாக நான் பிற மத கலாச்சாரத்தை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது.
23/1/2018 அன்று சாரண சாரணிய இயக்கத்தின் மாநில கவுன்சில் உறுப்பினர் பி. இராமசுவாமி அவர்கள் அந்த இயக்கத்தை பற்றியும் அதன் கடமைகளை பற்றியும் கூறினார்.
இதன்மூலம் நாங்கள் சாரணரசாரணியர் இயக்கம் பற்றி அறிந்து கொண்டோம்.
நாங்களும் அவ்வாறு பிறருக்கு உதவி செய்வோம் என உறுதி எடுத்துக் கொண்டோம்.
24/1/2018 அன்று எங்கள் கல்லூரியில் குருஜீ பழனி அவர்கள் முன்னிலையில் அனைவரும் இணைந்து யோகா செய்தோம்.
யோகா வினால் நமக்கு ஏற்படும் நன்மைகளை பற்றி அறிந்து கொண்டோம்.
25/1/2018 அன்று வாக்காளர் தினமாக கொண்டாட படுகிறது.
அன்றைய தினம் எங்கள் கல்லூரியில் நாங்கள் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக் கொண்டோம்.
இதிலிருந்து ஒரு வாக்காளருக்கு உள்ள கடமையை அறிந்து கண்டேன்.