Sunday, 16 July 2017

கோ-கோ

25-03-2017 ல் கல்லூரி விளையாட்டு விழாவின் போது நடந்த கோ-கோ போட்டியில் எங்களுடைய அணி முதல் பரிசு பெற்றது.
  
       கல்லூரி ஆண்டுவிழாவின் போது மேடைக்கு சென்று முதல் பரிசு வாங்கியது மிகவும் பெருமையாக இருந்தது.

பேரிடர் மேலாண்மை

எங்கள் கல்லூரியில் 28-03-2017 பேரிடர் மேலாண்மை என்ற பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது. அதில் நான் முதன் முறையாக இரண்டுமாடி கட்டிடத்தில் கயிற்றில் இருந்து கீழே இறங்கினேன்.
     நான் கயிற்றில் இறங்கியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அது என்னுடைய மனதில் அச்சத்தை போக்கி உறுதியைக் கொடுத்தது.

ஆசிரியர் தினவிழா

எங்கள் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடினோம். அதில் நான் ஆசிரியர் தினம் பற்றிய சிறு உரை நிகழ்த்தினேன். அந்த சொற்பொழிவு அனைவரையும் கவர்ந்ததாக என்னுடைய சக மாணவிகளும் கூறினர்.

         இதன் மூலம் என்னுடைய மேடை பயம் போய்விட்டது. மேடையில் சொற்பொழிவு ஆற்றுதல் என்னும் திறன் ஒரு ஆசிரியருக்கு இன்றியமையாத ஒன்றாகும்.

Saturday, 15 July 2017

ஓணம் பண்டிகை

13-09-2016 அன்று எங்கள் கல்லூரியில் நடைப்பெற்ற ஓணம் பண்டிகையை முன்னிட்டு அத்தப்பூ கோலப்போட்டி நடைப்பெற்றது. அதில் எங்கள் அணியான"வீரபாண்டிய கட்டபொம்மன்" அணிக்கு இரண்டாவது
பரிசு கிடைத்தது.
    இதுதான் நாங்கள் கல்லூரியில் வாங்கிய முதல் பரிசு.

நுண்ணிலை கற்பித்தல்

நுண்ணிலை கற்பித்தல் பயிற்சி ஒரு வாரம் நடந்தது. முதலில் பாடம் நடத்தும்போது ஆசிரியர் சில பிழைகளை சுட்டிகாட்டினார். மறுநாள் அதை நினைவில் கொண்டு பாடம் நடத்தினேன். சிறப்பாக இருந்ததாக அனைவரும் கூறினார்கள். ஆசிரியர் குறைகளை சுட்டிகாட்டியதால்தான் இரண்டாவது முறை பாடம் நடத்தும் போது என்னால் நன்றாக நடத்த முடிந்தது.

         "நாம் ஒரு செயலை செய்யும்போது அதில் உள்ள தவறுகளை சுட்டிகாட்டி
நம்மை வழிநடத்த ஒரு ஆசிரியர் இருந்தால்தான் நம்மால் ஒன்றை முழுமையாக கற்று அதில் சிறந்து விளங்க முடியும்"என்பதனை தெரிந்துக் கொண்டேன்.

கல்லூரியில் முதல் நாள்

29-08-2016 அன்று கல்லூரியில் எங்களுக்கு முதல் நாள்.

            கல்லூரிக்கு சென்ற இரண்டாவது நாள் 30-08-2016 முதல் 03-08-2016 வரை Bridge course நடைப்பெற்றது.அதில் ஒரு ஆசிரியர் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டிய வரைபடத்தாளில் எழுதும்முறை,சுழலும் அட்டை,மாதிரிகள் போன்றவை தயாரிக்கும் முறைகளையும் யோகா,ஆளுமை திறனை வளர்பது எப்படி போன்ற பயிற்சிகள் தரப்பட்டன. அதில் அவர்கள் கேட்ட நிறைய கேள்விகளுக்கு நான் பதில் அளித்தேன். அவர்கள் என்னை பாராட்டியது எனக்கு மிகுந்த உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் அளித்தது.