Sunday, 16 April 2017
Monday, 10 April 2017
Tuesday, 4 April 2017
Assignment
கண்கள்(ஒளி உணர்வி)
கண் நமது உடலின் முக்கியப் புலனுறுப்பாகும். இரு கண்களும் மண்டையோட்டின் கண் குழிகளில் அமைந்துள்ளன.
கண்கோளம் மூன்று அடுக்குகளால் ஆனது.
1.வெளி அடுக்கு-விழிவெண் படலம்
2.நடு அடுக்கு-விழியடிக் கரும்படலம்
2.நடு அடுக்கு-விழியடிக் கரும்படலம்
3.உள் அடுக்கு-விழித்திரை(ரெட்டினா)
1.வெளி அடுக்கு-விழிவெண் படம்
புறத்தே உள்ள விழிவெளிப்படலமானது கண்ணின் முன்பகுதியைத் தவிர மற்ற பகுதிகளில் வெண்மை நிறமாகக் காணப்படுகிறது.
2.நடு அடுக்கு-விழியடிக் கரும்படலம்
இதில் உள்ள இரத்த குழாய்களில் உள்ள இரத்தமானது செறிவுமிக்க அடர்ந்த நிறமிகளை கொண்டது. விழியடிக் கரும்படலமானது விழியின் முன் பகுதியில் சிலியரி உறுப்பினையும், ஐரிஸ் எனும் ஒளிக் குறுக்கு அமைப்பினையும் விழிலென்சையும் உருவாக்குகிறது. ஐரிஸ்க்கு நடுவில் கண்பாவை எய்ற துவாரம் உள்ளது.
3.உள் அடுக்கு-விழித்திரை
உள் அடுக்கில் விழித்திரை உள்ளது. விழித்திரையானது கண்ணின் உணர்வுள்ள பகுதியாகும். இதில் உருளை மற்றும் கூம்பு வடிவில் ஒளி ஏற்புடைய இரு வகை செல்கள் உள்ளன. உருளைச் செல்கள் பல வித ஒளிகளைப் பார்க்காப் பயன்படுகிறது. ஆனால் இவை நிறத்தினை உணர்வதில்லை. கூம்புச் செல்கள் பல நிறங்களைப் பார்க்க உதவுகின்றன.
விழித்திரையில் உள்ள ஃபோபியா அல்லது மஞ்சள் தானம் பகுதியில் கூம்பு செல்கள் அதிகமாக உள்ளன. இப்பகுதி கூர்ந்து பார்க்கப் பயற்படுகிறது.
விழிவில்லை விழியின் முன்பகுதியில் உள்ளது. இது ஒளி ஊடுருவக்கூடியதும் இருபுறமும் குவிந்து மீள்தன்மையுடையதுமாக இருக்கும். விழி வில்லை சிலியரித்தசைகளுடன் தசை நார்களால் பொருத்தப்பட்டுள்ளது.
விழி வெண்படலத்திற்கும் விழி லென்சுக்கும் இடையே உள்ள திரவத்திற்கு விழிமுன் அறைத் திரவம் என்று பெயர். இத்திரவம் விழியில் பிம்பம் அமைப்பதிலும், கோள வடிவத்தைக் கண் தொடர்ந்து வைத்துக் கொள்வதிலும் உதவுகிறது.
Subscribe to:
Posts (Atom)